New Videos from Prabhanjam.TV
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் 7–ந்தேதி முதல் செயல்படும்




புதிய பன்னாட்டு விமான நிலையம் 7–ந்தேதி முதல் செயல்படும் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட்டது. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் ஆகிய இரண்டும் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது.
உள்நாட்டு விமான நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதி திறந்து வைத்தார். புதிய விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கண்ணாடி மாளிகை போல வடிவமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையம் பணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால் பன்னாட்டு விமான நிலையம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வரவில்லை. பல்வேறு வசதிகள் குறைவாக இருப்பதாக கூறி தனியார் விமான நிறுவனங்களும், விமான சேவை அதிகாரிகளும் புதிய விமான நிலையத்திற்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.
சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்வதற்கு போதுமான வசதி செய்து தரவேண்டும். தற்போது உள்ள வசதி போதாது என்று வலியுறுத்தினார்கள்.
இதனால் புதிய பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த குறைகளை களையும் வகையில் விமானத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 7–ந்தேதி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் 27–ந்தேதி புதிய பன்னாட்டு விமான நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் வரவில்லை.
இந்த நிலையில் இந்திய விமான ஆணையம் அதிகாரிகள் நேற்று இறுதிகட்ட ஆய்வினை புதிய பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொண்டனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பன்னாட்டு விமான நிலையம் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தன்ர.
இதையடுத்து வருகிற 7–ந்தேதி புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்படுகிறது. முதல் நாளில் 9 விமான நிறு வனங்களின் 7 விமானங்கள் சேவையை தொடங்குகிறது.
விமான நிலையத்தின் உள்ளே சில கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் பாதுகாப்பிற்காக மத்திய தொழிற்படையை சேர்ந்த 80 பேர் ஈடுபடுத்தவும் உள்ளனர். மத்திய பாதுகாப்பு படை போலீசார் 6–ந்தேதி முதல் பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே உள்ள பன்னாட்டு விமான நிலையம் சில மாதங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் பன்னாட்டு விமான நிலையம் புதுப்பிக்கப் படுகிறது.

Information From Maalaimalar

ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க அடுத்த மாதம் முதல் ரூ. 25 நுழைவு கட்டணம்



டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புவர்களிடம் அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல் ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் எழில் மிகும் பூங்காவும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான கட்டிடங்களும் உள்ளன.

இவற்றை சுற்றிப் பார்க்க உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்யும் வசதியை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர்.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த வசதியை பயன்படுத்தி 47 ஆயிரம் பார்வையாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கண்டு களித்துள்ளனர்.

தற்போது, ஜனாதிபதி மாளிகையின் எழிலை பேணி பராமரிக்க பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்த (செப்டம்பர்) மாதத்திலிருந்து ரூ. 25 செலுத்தி தனிநபர்கள் ‘ஆன்லைன்’ மூலம் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பதிவு செய்து கொள்ளலாம்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணத்தை செலுத்தும் ‘இ-பேமெண்ட்’ வசதி நேற்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய கட்டண முறையால் இதுவரை இலவசமாக ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வந்த 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Information From Maalaimalar

சினிமா நூற்றாண்டு விழா: சென்னை தியேட்டர்களில் 1 வாரம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலின் பழைய படங்கள்





இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
24–ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 1940, 50 மற்றும் 60களில் வெளியான பழைய படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி உள்ளிட்ட படங்களும், சிவாஜி நடித்த வசந்தமாளிகை, தங்கபதக்கம், கவுரவம், திரிசூலம், கர்ணன் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளது.
ரஜினியின் அண்ணாமலை, படையப்பா, வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களும், கமலின் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது படங்களும் திரையிட உள்ளன

Information From Maalaimalar.

ராசிபுரம் அருகே மணல் லாரி மீது பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி




நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை பெங்களூருக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சாமிநாதன் ஓட்டிச் சென்றார். அதில் மாற்று டிரைவர் அந்தோனி சேவியர் உடன் சென்றார். அந்த பஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிளவில் சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகேயுள்ள மல்லூர் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் இடது பக்கத்தில் மணல் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.
அந்த மணல் லாரி மீது அரசு விரைவு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாற்று டிரைவர் அந்தோனி சேவியர் 2 கால்களும் துண்டாகி பஸ்சுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 11 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெங்களூரைச் சேர்ந்த ராமர் என்ற பயணி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அரசு விரைவு பஸ்சின் இடது பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. நின்று கொண்டிருந்த மணல் லாரியின் பின் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பஸ் மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி கவிழ்ந்தது. லாரி மீது பஸ் மோதியதில் தரையில் உட்கார்ந்து லாரியில் ஜாக்கி ஏற்றிக் கொண்டிருந்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர் டிரைவர் மற்றும் கிளீனர் ஆக இருக்கலாம் என தெரிகிறது.
அவர்களைப் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் 11 பயணிகள் மற்றும் லாரி தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 13–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தாமரைச்செல்வன் (ராசிபுரம்), மனோகரன் (வெண்ணந்தூர்) சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் மல்லூர் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சேலம் கிளையைச் சேர்ந்த மேலாளர் சிவக்குமார், நெ.3 குமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சாமிநாதன் தூக்க கலக்கத்தில் அதிக வேகத்தில் பஸ்சை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேசிபி. எந்தரம் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்து காரணமாக திருச்சி, கரூர், மதுரை, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற பஸ்கள், லாரிகள் மல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டன. 

Information From Maalaimalar

மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!



பீட்சா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் இயக்கும் அடுத்த படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 7 வாரங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இப்படத்தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். இதுகுறித்து லட்சுமிமேனன் கூறும்போது, 

நான் இப்படத்தில் இட்லி விற்பவராக வருகிறேன். என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைவதற்கு படப்பிடிப்புக்கு செல்லும் முன் மதுரையில் உள்ள ரோட்டோர இட்லி கடைகளுக்கு சென்று, அவர்களின் விற்பனை முறையை தெரிந்து கொண்டேன். இதுபோன்று யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. 

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். இந்த பாடலை மதுரையிலேயே படமாக்கினர். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது 


Information From Maalaimalar

விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு


"விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், "முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம். நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன். "விஸ்வரூபம் படத்தின் கதையை ரெடி செய்தபோதே, இரண்டு பாகங்களாக தான், ரெடி செய்தேன். முதல் பாகம் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு, அதன் தொடர்ச்சியான, முழு கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதனால் தான், இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்கிறார்.

Information From Dinamalar

பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி


பெண்களுக்கான ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் கால் இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

ஸ்பெயின் அணி வீராங்கனை சாண்டல் ஜெனி 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினார். அதற்கு பதிலாக அடுத்த 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மோனிகா பதில் கோல் போட்டார். தேனீர் இடைவேளைக்கு சற்று முன் 30-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கேப்டன் பொனஸ்ட்ரா கோல் போட்டார். அதற்கு பதிலடியாக இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர் 34-வது நிடத்தில் கோல் போட்டார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது.

இடைவேளைக்குப்பிறகு இந்திய வீராங்கனைகளின் ஆட்டத்தில் சூடுபிடித்தது. இதனால் 41-வது நிமிடத்தில் கடாரியாவும், 48-வது நிமிடத்தில் ராணியும் கோல் போட்டனர். இதனால் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்கு பதில் கோல் போட ஸ்பெயின் வீராங்கனை முயன்றனர். ஆனால் பலனளிக்கவில்லை. இதனால் இந்தியா ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றது.

இந்திய அணி அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அல்லது தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது.

Information From Maalaimalar

கணித ஒலிம்பிக் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்றது இந்தியா


கணிதத்தில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1959ம் வருடம் ருமேனியாவில் தொடங்கப்பட்டது. இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான போட்டிகளாகும். முதலில் 7 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்தகொண்ட இப்போட்டி, நாளடைவில் விரிவடைந்து தற்போது 100 நாடுகள் வரை இதில் கலந்துகொள்கின்றன.
 
ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளும், மரபுகளும் மாறாமல் கணித ஒலிம்பிக் போட்டியின் ஆலோசனை வாரியம் வழி நடத்துகின்றது.
 
இந்த ஆண்டிற்கான 54வது கணித ஒலிம்பிக் போட்டி, கொலம்பியா நாட்டில் சாண்டா மார்தா என்ற இடத்தில் நடைபெற்றது. 97 நாடுகளில் இருந்து மொத்தம் 528 மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டனர். 

இதில், இந்தியாவில் இருந்து 6 மாணவர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவனம் இந்த மாணவர்கள் குழுவின் செலவுகளை ஏற்றது. இந்திய மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்ககலப் பதக்கங்களையும் இந்தப் போட்டியில் பெற்றுள்ளதாக நேற்று வெளிவந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கிக் சஹா, புதுடெல்லியைச் சேர்ந்த சுபம் சின்ஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பிலாயைச் சேர்ந்த பல்லவ் கோயல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரணாப் நுதி மற்றும் புனாவைச் சேர்ந்த அனீஷ் பிரசாத் செவேகரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றொரு மாணவர் பூனாவைச் சேர்ந்த சைத்தன்யா தபு என்பவர் ஆவார்.

Information From Maalaimalar

ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம்




ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம் அடைந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24–ந்தேதி ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய அதிசய குழந்தை பிறந்தது. உடலில் 2 தலை, 2 முதுகெலும்பு மற்றும் 2 நரம்பு மண்டலங்கள் இருந்தன.
இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மூச்சு திணறல் இருந்தது. எனவே குழந்தையை வெண்டி லேட்டரில் வைத்து டாக்டர்கள் பாதுகாத்தனர். இருந்தும் எளிதாக மூச்ச விட முடியாமல் குழந்தை சிரமப்பட்டது.
இந்த நிலையில் பிறந்த 5–வது நாளில் அதாவது கடந்த 29–ந்தேதி மதியம் அக்குழந்தை உயிரிழந்தது. இதற்கிடையே இந்த அதிசய குழந்தையை ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்து சென்றனர்.
பொதுவாக இது போன்று பிறக்கும் குழந்தை 5 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். எனவே, அக்குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடிய வில்லை.
கர்ப்பகாலத்தில் இக்குழந்தையின் தாய் போதிய மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார். மேலும், அவர் வசிக்கும் பகுதியில் சோனோ கிராபி பரிசோதனை வசதி இல்லாததால் வயிற்றில் வளர்ந்த போது குழந்தையின் நிலைமை கண்டறிய முடியாமல் போனது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Information From Maalaimalar

ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு: மத்திய அரசு திட்டம்




மத்திய மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இறக்குமதியை குறைக்கும் வகையில் ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பற்றாக் குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த வரி உயர்வுக்கு குறிப்பிட்ட எந்த திட்டமும் இல்லை. தங்கத்தின் மீதான இறக்குமதியில் மட்டும் தற்போது இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பற்றாக்குறையை தவிர்க்க இதனை மேலும் பல பொருட்களின் இறக்குமதியிலும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், அவசியம் இல்லாத சில ஆடம்பர பொருட்களின் இறக்கு மதியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதி அளவு குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எந்தந்த பொருட்களுக்கு எவ்வளவு வரிகள் உயர்த்தப்பட உள்ளது என்பது பற்றி ப.சிதம்பரம் தெரிவிக்க வில்லை.
சுங்கவரி அதிகரிப்பதின் மூலம் ஆடம்பர பொருட்களின் விலை உயரும்.

Information From Maalaimalar

அதிக நேரம் செல்போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்




தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.
அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Information From Maalaimalar

சூரியனின் ஐரிஸ் கருவி படம்: நாசா



நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனின் பிரத்யேக புதிய படத்தை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதிகம் அறியப்படாத இன்டர்பேஸ் ரீஜியன் என்னும் பகுதியை ஐரிஸ் கருவி படம் எடுத்துள்ளது. இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத பிரத்யேக படம் என்பதால் பல ஆராய்ச்சிக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஐரிஸ் என்று அழைக்கப்படும் இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலம் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோகிராஃப்-ல் உள்ள அல்ட்ரா வயலட் டெலஸ்கோப் மூலம் சூரியனின் வெளிப்புற தோற்றமும் படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. 

Information From Dinakaran

வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு



சென்னை: 2012-13ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை அடுத்த மாதம் 5ந் தேதி வருமான வரித்துறை நீடித்துள்ளது. வருமான வரியை தாக்கல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி மண்டல அலுவலகத்தில் 34 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 24 கவுன்டர்களும், காஞ்சிபுரத்துக்கு 3 கவுன்டர்களும், தாம்பரத்துக்கு 7 கவுன்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக தலா ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்க 30 கவுன்டர்கள் மற்றும் 2 உதவி மையங்கள் செயல்படுகின்றன. சிறப்பு கவுன்டர்கள் அடுத்த மாதம் 5ந் தேதி மாலை 5.30 மணி வரை செயல்படும். 

ரூ.5 லட்சத்திற்கு கீழ் மாதச் சம்பளம் வாங்கும் அனைவரும் இனிமேல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அவர்கள் 2013-14 மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். மேலும் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள் விரைவாக கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு (201213) தமிழகத்தில் ரூ.40 ஆயிரத்து 528 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.37 ஆயிரத்து 271 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.45 ஆயிரத்து 877 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் ஜூலை 25 வரை ரூ.8 ஆயிரத்து 136 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

Information From Dinakaran

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்களுக்கு இடையே சிக்கிய ஓட்டுனர்


சுவிட்சர்லாந்தில் இரண்டு ரயில்கள் நேர்க்கு நேர் மோதிக்கொண்டதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு சுவிட்சர்லாந்தின் கிரான்சஸ்- பிரஸ்-மார் னான்ட் என்ற இடத்தில் நேற்று இரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களுமே வேகமாக வந்துக்கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்தப்போது, ரயில்கள் தண்டவாளத்திலிருந்து தரை இறங்கி, ரயில் பெட்டிகள் கவிழ்ந்து நொறுங்கின. 

இந்த விபத்தில் சிக்கிய ஒரு ரயிலின் ஓட்டுனரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அவரது நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

Information From Webdunia

வங்கிகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி




வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மட்டுமின்றி, அதன் ரொக்க கையிருப்பு விகிதம் உள்ளிட்ட எதிலும் மாற்றம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற 2013-14 நிதி‌யாண்டுக்கான முதல் காலாண்டு கடன் கொள்கை மறு ஆய்வுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரெப்போ வீதம், அதாவது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தொடர்ந்து 7 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக நீடிக்கும்.
இதேபோல, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் செய்துள்ள குறுகிய கால டெப்பாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டியான ரிவர்ஸ் ரெப்போவிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், அது 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக தொடரும். இதுபோக, CRR எனப்படும் ரொக்க கை‌யிருப்பு விகிதமும், ஏற்கனவே உள்ள 4 சதவீதம் என்ற அளவில் இருந்து, இப்போதைக்கு மாற்றப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகளவில் நீடிப்பதும், ரூபாய் மதிப்பு சரிவு அதிகரித்திருப்பதுவும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைககளுக்கு காரணங்களாக கூறப்படுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசரவ் வங்கி கணித்துள்ளது.
முந்தைய கணிப்பான 5.7 சதவீதத்தை விட இது 0 புள்ளி 2 சதவீதம் குறைவு. இதனால், இன்று இந்திய பங்குசந்தையிலும் பெரிய அளவு தாக்கம் இன்றி, மந்த கதியில் வணிகம் தொடர்கிறது.

Information From Puthiyathalaimurai


கரையோர மக்களுக்கு தண்டோரா எச்சரிக்கை மேட்டூர் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது


மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளில் இருந்தும் 2 நாட்கள் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் இரு அணைகளில் இருந்தும் நீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 88,984 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 61,233 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் நீராடுவதற்கு வசதியாக நேற்று முன்தினம் மாலை முதல் வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 நீர்வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதாலும், டெல்டா பாசனத்துக்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படாததாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 101 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 104.22 அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3.22 அடி உயர்ந்துள்ளது. அணை யின் நீர் இருப்பு 70.41 டிஎம்சி. தண்டோரா: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியை தாண்டியதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதாலும், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், தொட்டில் பட்டி, சேலம் கேம்ப், பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேற்று முன்தினம் வருவாய் துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தனர்.

தமிழக&கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 76,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 75,000 கனஅடியாக சரிந்தது. கடந்த 27ம் தேதி வினாடிக்கு 81,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நடப்பு ஆண்டில் அதிகபட்ச அளவாகும்.நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நேற்று 10வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடித்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் ஒகேனக்கல் வெறிச்சோடியது.

Information From Dinakaran

2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு


2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பிரிவில் இந்தியா அணியும் ,பாகிஸ்தான் அணியும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெறும் எனவும் , பிப்ரவரி 14-ல் நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியுடன் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Information From Puthiyathalaimurai

அடுத்த மாதம் விஜய், பரத், விமல் படங்கள் ரிலீஸ்


ரம்ஜான் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) தலைவா, தேசிங்கு ராஜா, ஐந்து ஐந்து ஐந்து, ரகளபுரம், ஆதலால் காதல் செய்வீர், தங்க மீன்கள் ஆகிய ஆறு படங்கள் ரிலீசாகின்றன. இவை தவிர மேலும் சில படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவா படத்தில் விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். மதராசப்பட்டிணம் விஜய் இயக்கியுள்ளார். சாதாரண இளைஞன் மக்கள் தலைவனாக எப்படி உருவாகிறான் என்பதே கதை. ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
தேசிங்கு ராஜா படத்தில் விமல், பிந்துமாதவி ஜோடியாக நடித்தள்ளனர். எழில் இயக்கியுள்ளார். இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. இப்படம் சுதந்திர தினத்தையொட்டி 15–ந்தேதி ரிலீசாகிறது.
ஐந்து ஐந்து ஐந்து படத்தில் பரத், மிருதிகா ஜோடியாக நடித்துள்ளனர். சசி இயக்கியுள்ளார்.
இதில் பரத் சிக்ஸ் பேக் உடல் கட்டில் நடித்துள்ளார். ஆக்சன் படமாக தயாராகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் பரத் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தங்க மீன்கள் படத்தை ராம் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கவுதம்மேனன் தயாரித்து உள்ளார்.
மனைவியை பிரிந்த இளைஞன் தன் குழந்தையை பாதுகாக்க வேலை தேடி எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதே கதை. இதில் சாதனா என்ற சிறுமி முக்கிய கேரக்ரில் நடித்துள்ளார்.

Information From Maalaimalar 

இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்




இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.
அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது.
அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ஆண்டுகள் மாத்யூகிரீன் உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்தப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரீன் ''நான் மிக அதிர்ஷ்டசாலி என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் இருதய மாற்று ஆபரேசன் மூலம் நான் 3–வது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன்'' என்றார்.

Information From Maalaimalar

பிரான்ஸ் நகை கண்காட்சியில் ரூ.320 கோடி வைரம் கொள்ளை



பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் உள்ள கார்ல்டன் நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடந்தது. அதில், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்க நகைகள் மற்றும் வைரங்களை பார்வைக்காக வைத்திருந்தன.
இந்த நிலையில், கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின் அரங்கில் இருந்து வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.320 கோடி. இவை இஸ்ரேலை சேர்ந்த லெவ் லெவில் என்ற கேடீஸ்வரருக்கு சொந்தமானவை. இந்த வைர நகைகளை துப்பாக்கி முனையில் ஒரு நபரே கொள்ளையடித்து சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைத் துப்பாக்கி வைத்திருந்த அந்த நபர் கையுரை அணிந்திருந்தான். முகத்தை கர்ச்சீப்பால் மறைத்திருந்தான். அரங்கத்தில் இருந்தவர்களை துப்பாக்கியால் மிரட்டி நகைகள் அடங்கிய பைகளை அவன் கொள்ளையடித்து சென்றான்.
அப்போது கண்காட்சி நடைபெற்ற அறையின் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தனர். இருந்தும், அவன் துணிச்சலாக நூதன முறையில் இந்த கொள்ளை சாகசம் நிகழ்த்தி இருக்கிறான்.
இதுபோன்று நடைபெறும் கண்காட்சியில் நகை கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 18–ந் தேதி பெல்ஜியத்தில் நடந்த கண்காட்சியில் ரூ.300 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. மே மாதம் நடந்த கேன்ஸ் பட விழாவின் போது 2 நகை கொள்ளை சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Information From Maalaimalar 

விண்கற்கள் பூமியில் மோதாமல் தடுக்க 402 யோசனைகள்: நாசா விஞ்ஞானிகள் தகவல்




விண்கற்கள் மோதாமல் தடுக்க நாசா விஞ்ஞானி 402 யோசனைகளை வைத்துள்ளனர்.
விண்வெளியில் சுற்றி திரியும் எரிகல் என்ற ழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள் புகுந்து பூமியை தாக்குகின்றன.
அதை தடுக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் 402 விதமான யோசனைகள் வைத்துள்ளனர்.
அவற்றில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி பூமியின் அருகே சுற்றிதிரியும் சிறிய விண்கற்களை வேறு இடத்தில் நகர்த்தி வைக்கும் எதிர்கால திட்டமும் உள்ளது. இந்த தகவலை நாசாவின் அசோசியேட் நிர்வாகி பில் கிரஸ்டன்மேர் தெரிவித்தார்.
பூமிக்கு அருகில் சுற்றி ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களை கண்டுபிடிப்பது மற்றும் மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கும் விண் கற்களை கண்டுபிடிப்பது போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்த கருத்தரங்கு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

Information From Maalaimalar

ஹைட்ரஜன் பேருந்து இயக்கம்: நெல்லை விஞ்ஞானி சாதனை




மகேந்திரகிரி விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி கடந்த 5ஆண்டுகளாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றதையடுத்து நேற்று ஹைட்ரஜன் பேருந்தின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. டாடா மோட்டார்ஸ் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக ஹைட்ரஜன் பேருந்து இயக்கிக் காட்டப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் ஹைட்ரஜன் வாயு மூலம் பேருந்து இயங்கியது கண்டு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவில் ஹைட்ரஜன் மூலம் பேருந்து இயக்கி காட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக நெல்லையில் இருந்து ஆந்திரா வரை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த பேருந்தை ஓட்டிப் பார்க்கும் முயற்சியும் நடைபெறவுள்ளது.

Information From Puthiyathalaimurai

படித்ததோ "பாரின் டிரேடு'; பிடித்ததோ "பிளேடு': ஆண்களுக்கு முடிவெட்டி அசத்தும் பட்டதாரி பெண்!


பல்லடம்:படித்தது பி.காம்., (பாரின் டிடேடு); ஆனால், பார்ப்பதோ, சலூன் கடை வேலை; ஆண்களுக்கு மிக நேர்த்தியாக கட்டிங், சேவிங் செய்து அசத்துகிறார், பல்லடத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேலு, 55; சலூன் கடைக்காரர். மனைவி கமலம், 48. மகள் தேவி, 30; பி.காம்., பட்டதாரி. இவர், பல்லடம் முனியப்பன் கோவில் எதிரே, சலூன் கடை நடத்தி, ஆண்களுக்கு முடி வெட்டுகிறார்; சேவிங் செய்கிறார். பெண்கள், சிறுமியருக்கு சிகை அலங்காரமும் செய்கிறார். மிகவும் நேர்த்தியாக செய்யப்படும் கட்டிங், சேவிங்க் குறித்து கேள்விபட்டு பலர், வாடிக்கையாளர்களாகி வருகின்றனர்.

தேவி கூறியதாவது:திருப்பூரிலுள்ள சிக்கண்ணா கல்லூரியில் பி.காம்., (எப்.டி.,- பாரின் டிரேடு) படித்தேன். அரசு வேலைக்கு பலமுறை முயற்சித்தும் பலனில்லை. போலீஸ் எஸ்.ஐ., வேலைக்கு மூன்று முறை முயற்சித்து, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்; எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைய வில்லை. அரசு வேலை கனவு தற்காலிகமாக முடங்கியது.
குடும்பத்தில் வறுமை தலைதூக்கத்துவங்கியது. இருபது ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வரும் என் தந்தை தங்கவேலு, சர்க்கரை நோய் பாதிப்பால், கடையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். குடும்பத்தை வழிநடத்த, தந்தை தொழிலை, நானே செய்ய முடிவு செய்தேன்.சிறு வயதில் பள்ளியில் இருந்து வந்ததும், சலூன் கடையில் அமர்ந்திருப்பேன். இதனால், எவ்வாறு முடி வெட்டுவது; சவரம் செய்வது என தெரிந்து கொள்ள முடிந்தது. முனியப்பன் கோவில் எதிரே புதிதாக சலூன் கடை திறந்தேன். முடி வெட்டுவது, சேவிங் செய்வது பெண் என்பதால், ஆண்கள் முதலில் கடைக்கு வர கூச்சப்பட்டனர். சிலர் கேலியும், கிண்டலும் செய்தனர்.ஆண்களுக்கு முடி வெட்டி, சேவிங் செய்யும் நேர்த்தி கவர்ந்ததால், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சலூன் கடை அமைக்கவும், குடும்ப செலவுக்கும் ரூ.50 ஆயிரம் வரை, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளேன். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக, அந்த நிறுவனத்திற்கு பகலில் வேலைக்கு செல்கிறேன். காலை 6.00 - 9.00 மணி, மாலை 6.00 - இரவு 10.00 மணி வரை பகுதி நேரமாக சலூன் கடை நடத்தி வருகிறேன். கடன் முடிந்ததும், முழு நேரமாக கடையை நடத்துவேன்இவ்வாறு, தேவி கூறினார்.

Information From Dinamalar

படமாகும் கர்நாடக இசைமேதை கதை: புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி



கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் புரந்தர தாசர். கர்நாடக இசையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.

புரந்தரதாசர் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்னுடைய நண்பர் ராவ்பகதூரை அனுப்பி வைத்தார்.

விழாக்குழுவினர் புரந்தரதாசர் உருவத்தில் ரஜினியை ஓவியமாக வரைந்து ராவ்பகதூரிடம் வழங்கினர். பெங்களூரை சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர் இந்த படத்தை வரைந்து இருந்தார். ரஜினி நிஜமாகவே புரந்தரர் தோற்றத்தில் இருப்பதாக ஓவியத்தை பார்த்தவர்கள் பாராட்டினர். புரந்தரதாசர் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்றும் அப்படத்தில் புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்றும் விழாவில் வற்புறுத்தப்பட்டது.

ரஜினி ஏற்கனவே ஸ்ரீராகவேந்திரர் வேடத்தில் நடித்துள்ளார். எனவே புரந்தரதாசர் வேடத்திலும் அவர் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ரஜினி சார்பில் விழாவில் பங்கேற்ற அவரது நண்பர் ராவ்பகதூர் பேசும்போது விழாக்குழுவினர் அளித்த ஓவியத்தை ரஜினியிடம் ஒப்படைப்பேன். அத்துடன் புரந்தரதாசர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் வலியுறுத்துவேன் என்றார்.

Information From Maalaimalar

ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்த 2013 : அரையாண்டு ரிப்போர்ட்

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்...

கலெக்ஷனை அள்ளிய படங்கள்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு... பணம்... துட்டு... மணி.. மணி... என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம். 

விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார். 

சூது கவ்வும் அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.

பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்...

அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது. 

ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.

டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது. 

மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன்,  விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.

சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது. 



சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.



கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.



அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.



பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி. 



பாராட்டு பெற்ற பரதேசி, ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்...

பரதேசி: ரெட் டீ என்ற நாவலைத் தழுவி பாலா இயக்கிய பரதேசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரியே படமும் மீடியாக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது. கடந்த ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு விட்டதால் தேசிய விருது பட்டியில் சேர்க்கப்பட்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது மட்டும் கிடைத்தது.  இது எல்லோருக்கும் -ஏமாற்றமாக  இருந்தது. படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் லாபம் ஈட்டவில்லை.

தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பாராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.



மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.  



கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

Information From Dinamalar

Information From Dinamalar
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger